நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக வவுனியாவில் சுவரொட்டிகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

புதிய அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பிலான விவாதம் கடந்த மாத இறுதியில் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சிவசக்தி ஆனந்தனுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை நாம் ஏற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில் உரையாற்ற தடுத்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள

You might also like