இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவருக்கு நாமல் எம்.பி வாழ்த்து!

சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் இலங்கை அணியின்தலைவராக, சகல துறை வீரரான திசர பெரேராவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகளுக்கு திசர பெரேரா தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திசர பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது குறித்து தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like