பாடசாலைகளுக்கு விடுமுறை: பரீட்சைகள் பிற்போடப்பட்டன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

You might also like