மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை

நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதையடுத்து, மீனவர்கள் மற்றும் கடற்படையினரை தமது நாளாந்த கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது கரையோரப் பகுதிகளில் வேகமாக வீசிவரும் காற்று, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தெற்கு மற்றும் தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீற்றராக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

You might also like