சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலி, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் இருவர் மீனவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை கடற்தொழிலுக்கு சென்ற மேலும் 23 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை சேர்ந்த மூன்று மீனவர்களும் காலி மாவட்டத்தினை சேர்ந்த 10 மீனவர்களும் காணாமல் போயுள்ளதுடன் மொனராகலை மாவட்டத்தினை சேர்ந்த 10 பேரும் காணாமல் போயுள்ளனர்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையின் தென்மேற்கு பக்கமாக 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுவடைந்து அரேபிய கடற்பரப்பு ஊடாக நகரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடனான காற்று வீசக்கூடும் எனவும் பல பகுதிகளிலும் கடும் மழைபெய்யக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கரையோரப்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமூவ, மத்திய, ஊவா ம்றறும் மேல் மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

You might also like