மக்களே வெளியேறுங்கள் ! சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்தமுல்ல பிரதேச செயலக பிரிவிற்கும் இவ்வாறு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like