தாயும் தந்தையும் வேறு திருமணம்: கோழிக் கூண்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

நிந்தவூரில் சிறுவன் ஒருவர் அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

நிந்தவூர் அல் – மினா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்ற குறித்த சிறுவன் நண்பர்களுடன் விளையாடச்சென்று வீட்டுக்கு திரும்பி வராத நிலையில் பெற்றோர்கள் அவரை தேடியுள்ளார்கள்.

இதன்போது குறித்த சிறுவன் வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தாயும் தந்தையும் வேறு திருமணம் செய்துள்ள நிலையில் தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ள நிஹாஜின் சடலத்தை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல் சம்மாந்தறை பொலிஸார் சகிதம் வருகை தந்து பார்வையிட்டதோடு அவரது வீட்டுக்கும் சென்று பார்வையிட்டதோடு உறவினர் அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like