உலக சாதனை படைக்கும் உத்வேகத்தில் இந்திய அணி: தடுக்குமா இலங்கை?

தொடர்ச்சியாக 9-வது டெஸ்ட் தொடரை வென்று உலக சாதனையை சமன் செய்யும் உத்வேகத்தில் இந்திய அணி இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணியாக இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் திகழ்கிறது.

இங்கிலாந்து 1884-ம் ஆண்டிலிருந்து 1892-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதே போல் அவுஸ்திரேலியா 2005-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள் தொடர்ந்து 9 தொடர்களை வசப்படுத்தி இருந்தது.

இந்த உலக சாதனையை சமன் செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

இப்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட முதல் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளை தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா செய்தாலே போதும், இந்த தொடரையும் தனதாக்கி உலக சாதனையை சமன் செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like