தயார் நிலையில் முப்படை

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலைவும் அசாதாரண வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இராணுவத்தின் விசேட பயிற்சிகள் பெற்ற கமாண்டோ மற்றும் மீட்புப் படையணியினர் 160 குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்புப் பணிகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹிங்குராக்கொடை, இரத்மலானை மற்றும் காங்கேசன்துறை விமானப்படை முகாம்களில் மீட்பு பணிக்காக ஹெலிகப்படர்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக கடற்படையினரும் மீட்டு வள்ளங்களுடன் களத்தில் இறங்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தத்தமது பிரதேச அனர்த்த நிலைகள் குறித்த பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

You might also like