மைத்திரியின் டுவிட்டர் தளத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்பின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு தென் கொரிய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுக்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் தனது தென்கொரிய விஜயத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கொரிய மொழியில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு விழாவானது ஒரு புதிய உறவு மற்றும் ஒத்துழைப்பின் தொடக்கமாகும்.” என கொரிய மொழியில் பதிவிட்டுள்ளார்.

You might also like