நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.

இதனைக் கருத்திற் கொண்டு மின்தடை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப மின்சாரசபைக்கான 1901 எனும் இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி மின்தடை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அத்துடன் வழமையான மின்தடை முறைப்பாட்டு இலக்கமான 1987 இலக்கத்தையும் அதற்காக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார மின்சார சபையின் விநியோகப் பகுதிகளில் 1910 இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மின்தடை தொடர்பான தகவல்களை அறிவிக்கலாம்.

களுத்துறை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் வசிப்பவர்கள் 011-4418418 இலக்கத்திற்கும், தென் மாகாணத்தில் வசிப்பவர்கள் 071-4238623 இலக்கத்திற்கும் அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குவதன் மூலம் மின்தடையை சீர் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like