கிழக்கிலங்கையில் அனுராதபுர யுகத்திற்குரிய தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி தலவாய்கண்டம் என்ற இடத்தில் தொல்பொருள் திணைக்களம் நடத்திய ஆய்வில் அனுராதபுர யுகத்திற்குரிய தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

பன்குடாவெளி தொல்பொருள் பூமியில் 23 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், செங்கல் மதில், பழைய செங்கல் துண்டுகள், ஓடுகள், ஓரிடத்தில் குவிக்கப்பட்ட கருங்கல் தூண்கள், சந்திர வட்டக்கல், காவற்கல், சிலை பாதம், கட்டடம் உள்ளிட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாக தொல் பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்விலும் பல தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நில மட்டத்தில் இருந்து 3 அடி மற்றும் 12 ஆழத்தில் பாதம் ஒன்றுடன் நிர்மாணிக்கப்பட்ட நுழை வாசல் பகுதியின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இலங்கையின் மிகவும் பழமையான கற்பாலம் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை பிரதேசத்திற்கு வடக்கில் காயங்கேணி சதுப்பு நிலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

240 மீற்றர் நிலமான இந்த பாலம் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாலங்களில் நீளமான பாலம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மரபுரிமை மற்றும் கலாச்சாரத்தை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்கும் தேசிய கடமை என்பது காலத்தின் தேவையாக அறிந்து கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தொல் பொருள் திணைக்களம் ஊடாக சில மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக திணைக்களம் கூறியுள்ளது.

You might also like