வவுனியாவில் தீப்பற்றியேறிந்த இரு வர்த்தக நிலையம் : பல பிரதேசங்களுக்கு மின்சார தடை

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள வர்த்தக நிலையமோன்று இன்று (01.12.2017) மாலை 5.45மணியளவில் தீடிரேன தீப்பற்றியேறிந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு வவுனியா நகரசபையின் தீயணைப்படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள எம்.எஸ் மெர்டல் ஹாட்வேயாரில் இன்று மாலை திடிரேன தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினரினருடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸாரும் இணைந்து சுமார் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ் தீவிபத்து காரணமாக வேப்பங்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான்கோட்டம், தாஸ்கோட்டம், கணேசபுரம், சுந்தரபுரம், கூமாங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளின் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு மாற்று வீதியுடாக வாகனங்கள் பயணிக்கின்றன.

இவ் தீவிபத்து தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30க்கும் மேற்பட்ட வாயு சிலின்டர்கள் வர்த்தக நிலையத்திலிருந்து பொதுமக்களின் உதவியுடன் வெளியே அகற்றப்பட்டு இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like