வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கினால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம் : மக்கள் விசனம்

வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள எம்.எஸ் மெர்டல் ஹாட்வேயாரில் இன்று (01.12.2017) மாலை 5.45மணியளவில் திடிரேன தீப்பற்றியது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்படையினர் சரியான முறையில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லையேனவும் இவர்கள் சரிவர செயற்பட்டிருந்தால் ஒரு சில மணித்தியாலயங்களிலே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் ஆனால் வவுனியா நகரசபையின் அசமந்த போக்கினால் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னரே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரன் அவர்களிடம் வினாவிய போது,

எமது நகரசபைக்கேன ஒரு தீயணைப்பு வாகனமே தரப்பட்டுள்ளது. அதனை வைத்து நாங்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் பொலிஸாரின் ஒத்துளைப்புடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் . இன்னோரு தீயணைப்பு வாகனம் எமக்கு தேவையுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தி விரைவில் வவுனியா நகரபைக்கு இன்னோரு தீயனைப்பு வாகனத்தினை கொள்வனவு செய்வதாகவும். இன்றைய தினம் எமது ஊழியர்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தற்போது வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதுடன் மின்சாரமும் சீர் செய்யப்பட்டுள்ளது.

You might also like