கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்ட இராணுவ சிப்பாய்!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இராணுவ சிப்பாய் ஒருவரை நாச்சிக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அதே பேருந்தில் பயணம் செய்த இராணு சிப்பாய் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் ஆபாச சைகைகளை காட்டிய குறித்த இராணுவ சிப்பாய், பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாச்சிக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, இராணுவ சிப்பாய்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like