கிளிநொச்சியில் ஓரளவிற்கு சீரான காலநிலை! அசாதாரண சூழ்நிலைகள் எவையும் இல்லை

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த மழையினால் கிளிநொச்சியில் அமைந்துள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றன.

இந்நிலையில், கிளிநொச்சியில் ஓரளவிலான சீரான காலநிலை நிலவி வருகின்றது. மிக பெரிய நீர்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் நேரத்திற்கு நேரம் அதிகரித்து வருகின்றது.

இதேவேளை, அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், இருளுடனான காலநிலை நிலவுகின்றது. காலநிலை சீர் இன்மையால்  கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

கிளிநொச்சியில் தாழ்வான பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கி இருப்பதாகவும், இருப்பினும் அசாதாரண சூழ்நிலைகள் எவையும் இல்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like