கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது

மாத்தறை தெய்யந்தர – முலட்டியன பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் பயிலும் மாணவனின் பாடசாலை பையில் இருந்து 270 மில்லி கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தெய்யந்தர பொலிஸார் இந்த மாணவனை கைதுசெய்துள்ளனர்.

மாணவன் தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவரை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மாணவனை எதிர்வரும் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட பாடசாலை மாணவன் தனது பையில் கஞ்சாவை எடுத்துச் செல்வதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, ஆசிரியர்களுக்கு அறிவித்து, மாணவனின் பையை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like