இலங்கையில் ஏற்பட்ட விநோத சம்பவம்!

இலங்கையின் தற்போதைய வாழ்க்கை நடைமுறையை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்து செல்கிறது. அத்துடன் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்நிலையில் 1600 ரூபாய் பணம் தேட முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் 2000 ரூபாய் பணத்தை தொலைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாலியவெவ, கன்நதவுத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

1600 ரூபாய் பெறுமதியான 20 தேங்காய்களை, பணம் செலுத்தாமல் கொண்டு செல்ல முயற்சித்த குறித்த நபர் 2000 ரூபாய் பெறுமதியான ஹெல்மட்டை மறந்து விட்டு சென்றுள்ளார்.

கடை ஒன்றுக்கு சென்ற நடுத்தர வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கடை உரிமையாளரிடம் தேங்காய் விற்பனை விலை என்ன என கேட்டுள்ளார்.

கடை உரிமையாளரின் மனைவி ஒவ்வொரு தேங்காயும் 85 ரூபாய் என்று கூறியுள்ளார். ஒரு மத சார்பான நிகழ்விற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறி விலையை குறைக்குமாறு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 80 ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ள நிலையில் கடை உரிமையாளரின் மனைவி 20 தேங்காய்களை உரப்பை ஒன்றில் கட்டியுள்ளார்.

அந்த தேங்காய் பையை பாதுகாத்தவர் 5 கிலோ அரிசியை வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அந்த பெண் உள்ளே சென்று அரிசியை கொண்டு வருவதற்கு முன்னர் குறித்த நபர் தேங்காய்க்கு பணம் செலுத்தாமல் தப்பி சென்றுள்ளார்.

எனினும் தப்பிச் சென்றவர் 2000 ரூபாய் பெறுமதியான ஹெல்மட்டினை மறந்து சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நிலவிய கடும் வறட்சி காரணமாக தெங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் தேவைக்கு ஏற்ப தேங்காயை வழங்க முடியவில்லை.

ஒரு தேங்காயின் நிர்ணய விலை 75 ரூபா என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like