விஜய் திடீரென்று அப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை- பிரபல நடிகரின் பேட்டி

நிவின் பாலி நடித்த நேரடி தமிழ் படமான ரிச்சி என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தை பற்றி நிறைய பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் விஜய்யை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், பிரேமம் படம் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் உடனே எனக்கு போன் செய்து பாராட்டினார், அவரிடம் இருந்து போன் காலை எதிர்ப்பார்க்கவில்லை.

பிறகு என்னை அவருடைய இடத்திற்கு அழைத்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். பின் 20-30 நிமிடம் இருக்கும் என்னுடைய அடுத்த படங்கள், இதற்கு முன் நான் செய்த விஷயங்கள் என அனைத்தையும் பற்றி பேசினார் என்றார்.

You might also like