முல்லைத்தீவில் இந்த வருடமாவது வெளிச்ச வீடு கிடைக்குமா

முல்லைத்தீவில் இந்த வருடத்திலாவது வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“1990 ஆம் ஆண்டுக்கு முன்னர், முல்லைத்தீவில் வெளிச்ச வீடு இருந்தது. போர் காரணமாக வெளிச்ச வீடு அழிந்து விட்டது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற கூட்டங்களில், வெளிச்ச வீட்டை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெளிச்ச வீடு இல்லாததன் காரணமாக கடலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கரைக்குத் திரும்புவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக கடற்சீற்றம், கால நிலை மாற்றங்களின் போது கூடுதலான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிச்ச வீடு இல்லாததன் காரணமாக 5,000 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

You might also like