சாந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்துக்கு விளையாட்டு உபகரணங்கள்

சாந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்துக்கு  விஜயம் செய்த அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகைதந்த வைத்தியர் கணபதிப்பிள்ளை ரவி (MEMBER OF AUSTRALIA MEDICAL AID FOUNDATION) அவர்களிடம் அக் கல்வி நிலைய மாணவர்கள்,ஆசிரியர்கள் தமக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் பிரகாரம் உடனடியாக கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியை வழங்கி வைத்தார்.

அவ் விளையாட்டு உபகரணங்களை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.

இக் கல்வி நிலையத்தில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like