கிளிநொச்சியில் பின்தங்கிய பிரதேசங்களின் நன்மை கருதி போட்டி பரீட்சைகளுக்கான இலவச வகுப்புக்கள்

முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சைக்கான கருத்தரங்கு கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பரீட்சாத்திகளின் நன்மை கருதி இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல பிரிவின் அனுசரணையுடன் இந்த கருத்தரங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் அளவில் இடம்பெற்று வருகிறது.

குறித்த கருத்தரங்கானது, கிளிநொச்சி மாவட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றதுடன், விஷேடமாக முகாமைத்துவ உதவியாளர் போட்டி பரீட்சையை எதிர்கொள்ள இருப்பவர்களுக்காக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like