யாழ்ப்பாணத்தில் கோரமான வன்முறை காட்சிகள் நிறைந்த ‘வெட்டு கொத்து

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட வெட்டுகொத்து குறும்படம் ‘வெட்டு கொத்து’ இணையத்தில் வெளியாகியுள்ளது. கிருத்திகன் , வரோதயன், கோபிரஞ்சன், மயூரப்பிரியன் நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இக்குறும்படத்திற்கு அழகான முறையில் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார் புகைப்பட கலைஞர் நிசாந்தன்.

ரோஷன் நிரோஷ் படத்தொகுப்பில் தர்ஷன்ன் இசையில் பார்ப்பவர் நுரையீரலை கொள்ளையடிக்கிறது வெட்டு கொத்து குறும்படம். படத்தில் நோண்டியாக்கீட்டான், எலகிரி, அலுவல முடி இப்படி அன்றாடம் நாம் பயன்படுத்தும் வட்டார வழக்கு சொற்கள் வந்துபோவதோடு ஒரே லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிவந்த குறும்படங்களில் நாம் பெருமையாக சொல்லக்கூடிய குறும்படங்களில் ஒன்றாக மாறிவிட்ட கிருத்திகனின் ‘வெட்டு கொத்து’ படத்தை பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

You might also like