வவுனியாவில் கோவிற்குளத்தில் அன்புலன்ஸ் விபத்து (படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளத்திலிருந்து  வவுனியா வைத்திய சாலைக்கு பயணித்துகொண்டிருந்த நோயாளர்  காவுவண்டி திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..

இவ் விபத்து பற்றி மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா வைத்திய சாலைக்கு பயணித்துகொண்டிருந்த நோயாளர்  காவுவண்டி சிவன்கோயிலடியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நோயாளர் காவு வண்டியின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை சுகவீனம் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டினுடைய சுவரில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர் .

எனினும் காவு வண்டியில் நோயாளர் யாரும் இல்லை என்பதும்,  இவ்விபத்தில் எதுவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like