அக்கராயன் குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் ​வேண்டுகோள்

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தினை முழுமையான புனரமைப்புக்கு உட்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2010ஆம் ஆண்டில், ஜப்பான் அரசின் 350 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் குளத்தின் அணைக்கட்டு மற்றும் முக்கிய வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டன.

ஆனால், இக்குளத்தினை முழுமையாகப் புனரமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவை என கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தால் மதிப்பிடப்பட்டிருந்தது.

அக்கராயன் ஆற்றை துப்புரவாக்குதல், வாய்க்கால்கள் புனரமைத்தல் என்பன மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், இதன் காரணமாக நீர் வீண்விரயம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like