முல்லைத்தீவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது

இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் கடந்த 11 ஆம் திகதி வரை காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் .

கடந்த வாரம் மாத்திரம் மூவர் உயிரிழந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாட்டத்தில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக 50 முதல் 70 வயது வரையானவர்கள் உயிரிழந்துள்ளதாக நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.கஜன் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

You might also like