தன்னைத் தானே சிதைத்துக் கொள்ளும் மனிதர்… காரணம் தான் என்ன?

குழந்தையாக இருக்கும் போது அனைவருக்குமே கார்டூன்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு பிடித்த கார்டூன் சேனலை மாற்றினால் அடம் பிடிப்பார்கள். அழுவார்கள். சாப்பிட மாட்டார்கள். ஆனால், வளர, வளர அந்த வட்டத்தில் இருந்து வெளிவந்து விடுவார்கள்.

இங்கே! ஹென்றி எனும் நபர். தான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த மார்வல் கார்டூன் கதாபாத்திரம் ஒன்றாகவே தான் மாற வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அப்படி அவ்வளவு அழகாக இருக்கிறதா என்ன அந்த கதாப்பாத்திரம்? என்ற கேள்வி எழுப்பினால். அதுவும் கிடையாது.

ரெட் ஸ்கல் எனும் அந்த கார்டூன் பாத்திரம் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அது ஒரு சூப்பர் வில்லன் என போற்றப்படும் கார்டூன் ஆகும்.

ஹென்றி குழந்தை வயதிலிருந்தே ரெட் ஸ்கல் (Red Skull) என்ற கதாபாத்திரத்தின் மீது அதீத ஈர்ப்புக் கொண்டிருக்கிறார். அதனால், தனது 37 வயதில் அந்த கதாபாத்திரமாகவே உருமாறிவிட்டார் ஹென்றி. ரெட் ஸ்கல் எனும் மார்வல் சூப்பர் வில்லன் போல உருமாற ஹென்றி பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஹென்றியின் இந்த படம், இவர் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் முன்னர் எடுத்தப் படமாகும்.

ஹென்றி ரெட் ஸ்கல் போல உருமாற திட்டமிட்டப் போதே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அப்போது கணவர் மட்டுமல்ல, ஒரு குழந்தைக்கு தந்தையும் கூட. அப்போது தான் இவர் எமிலியோ எனும் டாட்டூ மற்றும் உடல் உருமாற்ற சர்ஜரி செய்யும் நிபுணரை சந்தித்து தனது ஆசைகளை கூறியிருக்கிறார்.

ரெட் ஸ்கல் போன்ற உருமாற்றம் செய்துக் கொள்ள ஆரம்பத்தில் இவர் அடித்தோல்களில் சில இம்பிளாண்ட் சார்ஜரிகள் செய்துக் கொண்டார். அப்போது தான் ரெட் ஸ்கல் போன்ற உண்மையான உருவம் பெற முடியும்.

ஹென்றிக்கு ரெட் ஸ்கல் போன்ற தத்ரூபமான ரூபம் பெற வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்காக தனது கண்களிலும் டாட்டூக்கள் குத்திக் கொண்டுள்ளார் ஹென்றி. ஹென்றியின் கண்களில் வெள்ளை பகுதியே இப்போது இல்லை. முற்றிலும் கருப்பாக தான் இருக்கும்.

ரெட் ஸ்கல் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு மூக்கு இல்லை. இதற்காக ஓர் அறுவை சிகிச்சை மூலமாக தனது மூக்கை அறுத்துக் கொண்டார் ஹென்றி. இப்போது ஹென்றிக்கு பாதி மூக்கு தான் இருக்கிறது. மூக்கின் விளிம்பு பகுதியை அறுத்து அகற்றிவிட்டனர்.

ஹென்றி இந்த உரு மாற்றத்தை மிகவும் விரும்புகிறார். யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு பல கடுமையான, அபாயகரமான முடிவுகளை எடுத்து வருகிறார் ஹென்றி. ஹென்றி தனது தாடை, கன்னம் போன்ற பகுதிகளில் இம்பிளாண்ட் செய்துக் கொள்ள போவதாக கூறப்படுகிறது, பிறகு அதன் மேல், முழுவதுமாக சிவப்பு, கருப்பு டாட்டூ குத்திக் கொள்ளவிருக்கிறார்.

ஹென்றியின் தற்போதைய தோற்றத்தை பார்த்து நீங்கள் கவலைப் படும் நபராக இருந்தால். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். இது இன்னும் முழுமையடையாத நிலை தான். இன்னும் ஹென்றி மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பலவன இருக்கின்றன.

இது ஆசையா? மன நோயா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இருக்கிறது ஹென்றியின் இந்த நடவடிக்கைகள்

You might also like