வவுனியாவில் மனைவி மீது கணவன் கத்திக்குத்து : கணவன் கைது

வவுனியாவில் கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பழைய சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது ஆண் பிள்ளையின் தாய் வடிவேல் தமயந்தி 21வயது மீது கணவன் கத்தியால் இன்று (02) அதிகாலை 5மணிக்கு ஒளிந்திருந்து தாக்கியதில் படுகாயமடைந்து வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி தனது கணவனுடன் முரண்பட்டு நீதிமன்ற வழக்கில் மனைவிக்கு கணவனால் மாதாந்தம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது. மனைவி தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.  எனினும் சில மாதமாக மனைவிக்கு செலுத்தவேண்டிய\ தொகையினை வழங்க தவறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே  சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று தனது மகனை பார்வையிடச் சென்றதுடன் மனைவியின் தந்தையிடம் உங்கள் மகளை வெட்டுவேன் என்று தெரிவித்து விட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை கணவன் ஒளிந்திருந்து மனைவி மீது கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது கணவன் தற்போது கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like