வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி

இன்று (03.02.2017) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை மருத்துவ சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் இதனை ஆட்சேபித்து களனி மருத்துவப்பீட மாணவர்கள் நேற்று (02.02.2017) பேரணி ஒன்றை நடத்தினர்.
முன்னதாக இந்த பேரணிக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தவு பெறப்பட்டிருந்தபோதும் மாணவர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகம் வரை தமது பேரணியை நடத்தினர்.
இதன்போது பேரணி மீது கண்ணீர் மற்றும் தண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் 12 மருத்துவப்பீட மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் மாணவர் மீது தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்தே அரச மருத்துவ அலுவலர் சம்மேளனத்தை சேர்ந்த மருத்துவர்கள் இன்று காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் பிரிவுகள் மாத்திரமே இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You might also like