வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் இறுதிக்கிரியை வவுனியாவில் 12.00மணிக்கு

வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று ( 03.02.2017) காலை 11.00மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உரிய தீர்வு கிடைக்கவிடில் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எமது பணிப்புறக்கணிப்பு இலங்கை முழுவதும் எமது ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டேனிஸ்வரனின் கொடும்பாவியினை எறிக்கவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like