தற்கொலை செய்து கொண்ட புதுமணத்தம்பதியினர்

பெங்களூரில் திருமணமான புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரவின்(24), பிரியா (19) தம்பதியினருக்கு கடந்த நவம்பர் 2 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் Kengeri நகரில் வாடகை வீட்டில் குடியேறினர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாவின் அம்மா, தம்பதியினருக்கு போன் செய்துள்ளார். ஆனால் இருவரும் அழைப்பை ஏற்காத காரணத்தால் வீட்டிற்கு சென்று தாய் பார்த்தபோது, இருவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.

சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த இவர்கள் இருவருக்குள்ளும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அப்படியிருக்க எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது தெரியவில்லை.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது என இரு வீட்டாரின் பெற்றோரும் தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like