கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய சாரதிகளுக்கு சிறைத்தண்டனையும் தண்டப்பணமும்

கிளிநொச்சி பிரமந்தனாறு, கல்லாறு ஆகிய பகுதிகளில் அனுதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரச் சாரதிகளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணமும் 10 நாட்கள் கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய 7 உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்ததுடன் 10 நாள் கட்டாய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

You might also like