கிளிநொச்சி மாவட்ட நீதவானின் உத்தரவிற்கு அமைய சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 7 சிறுவர்கள்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் இடைவிலகிய 12 சிறுவர்களுள் 7 சிறுவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை, புன்னை, நீராவி ஆகிய பகுதிகளில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின் போதே பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் இடை விலகிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறுவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர் நிலையத்தில் வைத்து சிறுவர்களை பராமரிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது இடைவிலகிய மாணவர்களின் தொகை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like