சற்று முன் வவுனியா இ.போ.ச சாலைக்கு விரைந்த அடைக்கலநாதனால் பதட்ட நிலை (படங்கள் இணைப்பு)

 இ.போ.ச சாலை ஊழியர்களின் பிரச்சினைக்கு நாளை (04.02.2017) காலை 11மணிக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதாக இடம்பெற்ற கலந்தரையாடலில் முடிவு

இன்று (03.02.2017) பிற்பகல் 2.30மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலகா, ஆகியோர் கலந்து கொண்டு இ.போ. ச சாலை ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் நாளை 11மணியளவில் இடம்பெறவுள்ள கலந்தரையாடலில் முடிவு பெற்றுத்தருவதாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் ஊழியர்கள் தமது போராட்டத்தினை கைவிடப்போதில்லை தொடர்ந்தம் தமது போராட்டம் இடம்பெறும் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

You might also like