காளையாக உருவெடுத்த ‘அதிசய பப்பாளி’… வைரலாகும் புகைப்படம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த இளைஞர்கள் தற்போது அரசியலிலும் குதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டுகள் பராம்பரிய மிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தனர் இவர்கள்.

அப்படி உலகளாவிய சாதனையாக திகழவைத்த இளைஞர்களையும், மாணவர்களையும் தமிழக மக்கள் போற்றி புகழ்ந்து, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் எதிர்காலம் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற பெயரில் தமிழகத்தின் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இளைஞர்கள் சக்தி ஒன்றிணையப் போவதாக தகவல் வெளியானது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனமும் மும்முரமாக நடந்து வருகிறது.

அப்படி ஜல்லிக்கட்டுக்காக கூடிய இந்த இளைஞர்களின் கூட்டம், அதே காளையையே சின்னமாக முன்னெடுத்துச் செல்ல முயன்று வருகிறது.

இந்நிலையில், இயற்கையே இளைஞர்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது காளை வடிவிலான அதிசய பப்பாளி உருவாகியுள்ளது நம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசய காளை பப்பாளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

You might also like