இந்தியாவின் விலை மதிப்புமிக்க பிரபலம்.. விராட் கோலி முதலிடம்.

இந்த ஆண்டின் விலைமதிப்பு மிக்க பிரபலமாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் இந்தியாவின் விலைமதிப்பு மிக்க பிரபலமாக ஒருவரை தேர்ந்தெடுத்து அறிவிப்பது வழக்கம்.அந்தவகையில் கடந்த ஆண்டு விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முந்தியுள்ளார்.

இந்தியாவின் மிகவும் விலை மதிப்பு மிக்க பிரபலமானவர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பன்னாட்டு மதிப்பு மற்றும் விளம்பரம் மூலம் அவர் சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்படும்.

தற்போதைய, 2017-ஆம் ஆண்டுக்கான விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை முந்திவிட்டார்.

இந்த ஆண்டின் விராட் கோலியின் மொத்த விலை மதிப்பு விளம்பரம் உட்பட ரூ.923 கோடியாகும். கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2016-ம் ஆண்டு கோலியின் விலை மதிப்பு 2-வது இடத்தில் இருந்தார்.தற்போது ஷாருக்கான் 2-வது இடத்தில் உள்ளார். அவரது மதிப்பு ரூ.679 கோடியாகும்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே (ரூ.595 கோடி) 3-வது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.301 கோடி) 4-வது இடத்திலும், ரன்விர்சிங் (ரூ.269 கோடி) 5-வது இடத்திலும், சல்மான்கான் (ரூ.250 கோடி) 6-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் விலை மதிப்பு ரூ.134 கோடியாக உள்ளது.கடந்த 2014-ம் ஆண்டில் தான் அவரது விலை மதிப்பு அதிகபட்சம் ரூ.460 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like