பெரியப்பாவை கொடூரமாகக் கொன்ற தம்பி மகன்: அதிர்ச்சி காரணம்

பல ஆண்டுகள் அனுபவித்து வந்த சொத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்த தம்பி மகன் பெரியப்பாவை இரும்புக்கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரின் ஆண்டிமடம் அருகில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமாமிர்தம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் டிராக்டர் டிரைவராக இருந்து வந்துள்ளார்.

இவரின் நிலம் மற்றும் மனைகளை அவரின் தம்பி மகன் சரவணன், கடந்த 25 வருடங்களாக ஆண்டு அனுபவித்து வந்துள்ளார்.

தற்போது வயது முதிர்வு காரணமாக தனது சொந்த கிராமத்திற்கே திரும்பிய ராமாமிர்தம், இனி எனது சொத்துகளை நானே விவசாயம் செய்து கொள்கிறேன் என்று தனது தம்பி மகன் சரவணனிடம் கேட்டுள்ளார்.

முன்விரோதத்தினால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் சொத்து குறித்து கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்நிலையில், சரவணன் இரும்புக் கம்பியால் தனது பெரியப்பா ராமாமிர்தத்தின் தலையின் பின்பக்கம் தாக்கியதில் மண்டை உடைந்து ராமாமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இது தொடர்பான தகவலின் பேரில் போலிஸார்கள் சரவணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You might also like