சற்று முன் வவுனியாவில் சுதந்திரதினம் வடக்கு ஆளுனர் தலமையில் ஆரம்பமானது (படங்கள் இணைப்பு)

வவுனியாவில் சற்று முன் சுதந்திர நிகழ்வுகள் நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. ஹோகன புஸ்பகுமரா தலைமையில் ஆரம்பமாகியது.

வடமாகாண ஆளுநர் றேஜிணோல் கூரே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர். மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகா, மேலதி அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் திரு. ம. ஆனந்தராஜ், வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாசா, நகரசபை செயலாளர் திரு. ஆர். தயாபரன், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்ர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கரந்து கொண்டதுடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுதந்திர தின நிகழ்வகள் ஆரம்பமாகியது.

You might also like