வவுனியாவிலுள்ள மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி போராட்டம்

வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று 04.02.2017 காலை 10மணியளவில் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தேக்கவத்தைப்பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து ஆரம்பமாக ஆர்ப்பர்ட்ப் பேரணியாக சென்ற அப்பகுதி மக்கள் அதிலிருந்து 200மீற்றர் தொலைவிலுள்ள கண்டி வீதியிலுள்ள குறித்த மசாஜ் நிலையத்தினை அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், ஜெயதிலக, நகரசபை செயலாளர் திரு. ஆர். தயாபரன், வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் திரு. ம. ஆனந்தராஜ், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, கிராமசேவையாளர்கள், ஆகியோர் மேற்கொண்ட குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டதையடுத்து குறித்த மசாஜ் நிலையமானது நகரசபையில் அனுமதி பெறப்படாமல் செயற்பட்டு வருவதாக தெரிவித்து நகரசபை செயலாளர் இன்றிலிருந்து அதனை நிறுத்துவதாகத் தெரிவித்துடன் திங்கட்கிழமை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வததாகத் தெரிவத்ததையடுத்து அப்பகுதி மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையமானது நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன் அங்கு செயற்பாடுகள், விளம்பர காட்சிப்படுத்தல் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like