சமாதான செய்தியோடு கொழும்பு நோக்கி பறக்கும் கிளிநொச்சி புறாக்கள்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

இன்று காலை கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

குறித்த புறாக்கள் சுமாா் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனர்.

சிறிய துண்டு ஒன்றில் தகவல்கள் எழுதப்பட்டு புறாக்களின் காலில் கட்டப்பட்டு இன்று காலை 7.45 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

புறாக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள தகவல் துண்டில் தகவல் எழுதியவா்களின் தொலைபேசி இலக்கமும் எழுதப்பட்டுள்ளது.

புறாக்கள் கொழும்பைச் சென்றடைந்ததும் அங்கிருந்து குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என ஏற்பாட்டாளா்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபா் வெலிகன்ன, மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், புகையிரத நிலைய அதிபர், மாவட்ட திட்டப்பணிப்பாளா், மதகுரு ஆகியோர் பறக்கவிட்டுள்ளனர்.

You might also like