வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு மூடு விழா

இன்று (04.02.2017) பிற்பகல் 11.30மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் புதிய பேரூந்து நிலையத்தினை முடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக  வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் தெரிவித்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் முதலாம் குருக்குத்தெரு மற்றும் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியிலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுவதுடன்   வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை இன்று முதல் மார்ச் 31ம் திகதி வரை முடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் மேலும் தெரிவித்தார்.

You might also like