வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகளும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபை பேரூந்துகளும் இன்று (05.02.2017) முதல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னர் இடம்பெற்ற தனியார் பேரூந்து மற்றும் இ.போ.ச பேரூந்து எவ்வாறு சேவையில் ஈடுபட்டதோ? அவ்வாறு சேவையில் ஈடுபடுவதுடன் இணைந்த நேர அட்டவனை தயாரித்து அதன் பின்னர் சேவை புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வது மேற்குறிப்பிட்ட முடிவுகள் நேற்றைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீண்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டு இ.போ. ச.சாலை  ஊழியர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும் இன்று (05.02.2017) இ.போ.ச பேரூந்துக்கள் மத்திய பேரூந்து நிலையத்திலும்  தனியார் பேரூந்துக்கள் புதிய பேரூந்து நிலையத்திலிலும் சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்.

You might also like