வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் மீது கல்வீச்சு : மூவர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வெள்ளிக்கிழமை ( 03.02.2017) மாலை 6.00 மணிக்கு 80க்கும்  மேற்பட்ட  பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த தனியார் பேருந்து கொடிகாமம் சந்தியை கடந்து செல்லும் போது பேரூந்தின் மீது  கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலில் பேரூந்தின் சாரதி புஸ்பராசா சிவானந்தன் 31 வயது  சாரதி படுகாயமடைந்ததுடன் பேருந்தில் பயணம் செய்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like