வட்டக்கச்சி கிராம அலுவலரின் காணியில் மிதிவெடி மீட்பு

கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள கிராம அலுவலர் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலரின் காணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போதே குறித்த மிதிவெடி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மிதிவெடி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை மிதிவெடி இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.

இந்த காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஏழு வருடங்களாக குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like