மாடு குறுக்கிட்டதால் நேர்ந்த விபத்து: முல்லைத்தீவில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பில் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது-36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வீதியில் மாடு குறுக்கிட்டதால் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அளம்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like