வவுனியாவில் விபத்து! மூன்று பிள்ளைகளின் தாய் பலி (படங்கள் இணைப்பு)

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார்.

பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் பிள்ளையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தபோதே எதிரில் வந்த பிக்கப் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியாகியுள்ளார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவருடைய உறவினரான 22 வயதுடைய பெண்ணும் அவருடைய 8 மகனும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

You might also like