கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகு வசதியை பயன்படுத்த முடியாத நிலை

மாற்றுத்திறனாளிகளுக்கென கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த அணுகுவசதி வழியானது, சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும், அதன் சரிவு தன்மையானது சக்கர நாற்காலிக்குரிய வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு பொதுக் கட்டடங்களில் அணுகுவசதி அமைக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பெரும்பாலான இடங்களில் அவை நடைமுறைப்படுத்தபடுவது இல்லை என்றும், இதனால் தங்களின் சுந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

சில பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் மேல் மிகவும் அக்கறை செலுத்தி அணுகும் வசதிகள் மாபிள்கள் பதித்து அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் அவ்வாறு அமைக்கப்பட்ட அணுகுமுறை வழியை தங்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றன என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like