கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி மக்கள்

காணிகளை விடுவிக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமது காணிகளை முழுமையாக இராணுவம் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கேப்பாப்புலவில் எட்டாவது நாளாகவும், புதுக்குடியிருப்பில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு இன்று சென்ற வடமாகாண சபை உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மக்கள் சார்பாக இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை புதுக்குடியிருப்பில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like