தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: கிளிநொச்சியில் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரிக்கை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாது இருக்க வேண்டுமெனில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என பயங்கரவாத தடுப்புப்பிரிவு மேல் அதிகாரி ஒருவரால் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இன்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்போது பாதுகாப்பு குறைவாக இருக்கின்றது.

அண்மையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்ற வேளையில் அவர்கள் பல திட்டங்களை வைத்திருந்தார்கள், பல திட்டங்களை செய்ய திட்டமிட்டிருந்தார்கள் , பல திட்டங்கள் செயற்படுத்த முடியாமல் போனது.

இவற்றை எல்லாம் இவர்கள் செய்வதற்கு காரணம் கிளிநொச்சியில் பாதுகாப்பு பலமாக இருக்கவில்லை என்பதே ஆகும்.

எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாது இருக்க வேண்டுமெனில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறித்த ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை கைது செய்ததில் இருந்து தற்போதைய கைது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் வெளிவருகின்ற செய்திகள் குறித்த சிங்கள ஊடகம் மூலமே முதலில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like