கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவம்

இலங்கையில் யுத்தத்தின் போது கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த செயற்கை கால்கள் இன்று கிளிநொச்சி இராணுவத்தினரால், கிளிநொச்சி ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அமெரிக்காவின் நிதி உதவியுடன், மாற்று கண்டி குண்டகசாலை வலுவுள்ளோருக்கான நிலையத்தினால் இந்த உதவித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன உள்ளிட்ட படை பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு செயற்கை கால்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like